வருகைக்கு நன்றி! ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.
ஆறுவது சினம்.
Aaruvadhu Sinam
ஆத்திரம் ஆற்றுக ( கோபம் தணியும் தன்மையுடையது,கோபத்தை ஆற்றுப்படுத்துக) )
Anger is to be calmed down (controlled)

வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தான், மதன். காரணம்: அவனுடைய 5 வயது மகள், மதுஷா, புதிதாக வாங்கிய மகிழ்வுந்தின் (காரின்) பின்னால் எதையோ கல்லால் கிறுக்கிக் கொண்டிருந்தாள். அவனுடைய *ஆத்திரம் கண்ணை மறைத்தது. மின்னலென விரைந்து சென்று, தனது மகளின் கையில் இருந்த கல்லைப் பிடுங்கி அந்தக் கல்லால் பிஞ்சுக் கைகளை நசுக்கி நாசம் செய்துவிட்டான்.

“அப்பா” என்று அச்சிறுமி அலறியபோதுதான், கோபத்தில் செய்த கொடுஞ்செயலை மதன் உணர்ந்தான். மனைவி உஷாவும் பதறி ஓடி வந்தாள். அனைவரும் அதே மகிழ்வுந்தில் ஏறி, அருகிலிருந்த மருத்துவமனைக்கு விரைந்தனர்.

மருத்துவர் சிகிச்சை கொடுத்துக் கொண்டிருக்கும்போது, மதனுடைய மனசாட்சி அவனுடைய குரல்வளையை நெறித்துக் கொண்டிருந்தது. தற்செயலாக, வெளியே வந்து தன்னுடைய மகிழ்வுந்தைப் பார்த்தவனுக்கு, இதயத்தில் இடி; கண்களில் மழை.
அந்த மகிழ்வுந்தில் “I LOVE MY DADDY!” (நான், என்னுடைய அப்பாவை நேசிக்கிறேன்) என்று ஆங்கிலத்தில் அழகாகக் கிறுக்கியிருந்தது.

கோபத்தில் செய்த குற்றத்தை நினைத்து வெட்கித் தலைகுனிந்தான்!

*சினம் சீரழிக்கும்! அதனால், ஆத்திரத்தை ஆற்றுவோமாக.